Breaking News

ஸ்கூட்டர் வாங்கிய 2 நாட்களில் பழுது ஓலா ஷோரூமை தீ வைத்து கொளுத்திய வாடிக்கையாளர் வைரல் வீடியோ Disgruntled Ola Electric customer allegedly sets showroom on fire

அட்மின் மீடியா
0

ஸ்கூட்டர் வாங்கிய 2 நாட்களில் பழுது ஓலா ஷோரூமை தீ வைத்து கொளுத்திய நபர் வைரல் வீடியோ Disgruntled Ola Electric customer allegedly sets showroom on fire,

கர்நாடகாவில் புதிதாக வாங்கிய ஓலா எலட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாகியதாலும் ஷோரூம் ஊழியர்கள் சரியான முறையில் ரெஸ்பான்ஸ் அளிக்காத விரக்தியில் ஷோ ரூமுக்கு தீ வைத்த நபர், 

6 வாகனங்கள் உள்பட 8.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..!

கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் செயல்பட்டு வரும் ஓலா ஷோரூமில், முகமது நதீம் என்பவர் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஸ்கூட்டர் வாங்கிய 2 நாட்களிலேயே ஸ்கூட்டரில் பிரச்னை வந்துள்ளது.

A customer of an Ola electric scooter in Karnataka's Kalaburagi set a showroom on fire over an alleged lack of proper customer support for his newly purchased electric vehicle.

ஸ்கூட்டரில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வதற்காக, அதே ஷோ ரூமுக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், ஸ்கூட்டரில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதில் ஷோரூம் ஊழியர்கள் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடுப்பான நதீம்  ஆத்திரத்தில் ஷோரூமுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால், தீ மளமளவென பற்றி எரிந்ததில் அங்கிருந்த 6 ஓலா எலக்ட்ரீக் ஸ்கூட்டர்கள் மற்றும் கம்யூட்டர்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.8.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நதீமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1833851629482746365

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback