ஒரே நாளில் 2 இடங்களில் அடுத்தடுத்து பற்றி எரிந்த ஓலா இ-பைக்குகள் முழு விவரம் ola electric bike fire accident
ஒரே நாளில் 2 இடங்களில் அடுத்தடுத்து பற்றி எரிந்த ஓலா இ-பைக்குகள் முழு விவரம்
ola electric bike fire accident |
சம்பவம் 1
கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த தினேஷ் இவர் ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை 6 மாதங்களுக்கு முன்பு வாங்கி அலுவலகம் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வீட்டிலிருந்து புறப்பட்டு சேலம் பை - பாஸ் சாலையில் திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது புகை வந்துள்ளது இதனை பார்த்த தினேஷ் இரு சக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு இறங்கி விட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் ஓலா இரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமானது. இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் 1
மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை கனகராஜ் அலுவலக பணியை முடித்துவிட்டு வீட்டிற்க்கும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர் ஓட்டி வந்த ஒலா இ.பைக் வாகனத்திலிருந்து திடீரென புகை வெளியாகி உள்ளது.
இதை பார்த்த கனகராஜ் தனது இரு சக்கர வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி இறங்கிவிட்டார் ஆனால் தீப்பிடித்து இருசக்கர வாகனம் முழுவதும் ஏரிந்து நாசமானது.
Tags: தமிழக செய்திகள்