இலவசமாக பைத்தான் கற்றுகொள்ள 2 நாட்கள் வகுப்பு முழு விவரம் Python Programming language free course
Python Programming language free course |
பைத்தான் Python என்பது கணினியில் பயன்படுத்தக் கூடிய ஒரு இலவச, கட்டற்ற, நிரலாக்க மொழி ஆகும். இதன் மூலம் நமது கணினி தேவைகளுக்கான எல்லா மென்பொருட்களையும் மிக எளிதில் உருவாக்கலாம்.
பைத்தான் மொழி ஆனது மாணவர்களுக்கும், கணினித் துறையில் உள்ளோருக்கும், கணினித் துறையில் நுழைய விரும்புவோருக்கும் பல வழிகளில் பயன்படுகிறது.
இலவச வகுப்பு:-
கணினி (IT) துறையில் வேலை வாய்ப்பை எளிதில் பெற உதவும் Python Programming இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி மற்றும் V For All Foundation சார்பாக சென்னை கோடம்பாக்கத்தில் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
கல்லூரி மாணவர்கள், கணினி (IT) துறையில் வேலை தேடுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
நாள் :-
அக்டோபர் 12, மற்றும் அக்டோபர் 13 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
நேரம் :-
காலை 9 :30 AM to 6 PM
Tags: கல்வி செய்திகள் மார்க்க செய்திகள்