Breaking News

தனியார் வாகனங்களுக்கு 20 கிமீ வரை சுங்கவரி ரத்து மத்திய அரசு அறிவிப்பு 20 km toll free

அட்மின் மீடியா
0

தனியார் வாகனங்களுக்கு 20 கிமீ வரை சுங்கவரி ரத்து மத்திய அரசு அறிவிப்பு 20 km toll free


தனியார் வாகனங்களுக்கு 20 கிமீ வரை சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. private vehicles will not be charged any fee for travelling up to 20 km on highways and expressways

தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் தினமும் 20 கிலோமீட்டர் வரை கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படும் வகையில் புதிய உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

                      

நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த உத்தரவை ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதற்காக தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008ல் திருத்தம் செய்துள்ளது. 

அதில்,'தேசிய நெடுஞ்சாலைகள், நிரந்தர பாலம், பைபாஸ் அல்லது சுரங்கப்பாதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் தேசிய அனுமதி வாகனம் அல்லாத பிற வாகனங்களில் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் அடிப்படையிலான பயனர் கட்டண வசூல் முறையின்கீழ் ஒரு நாளில் ஒவ்வொரு திசையிலும் 20 கிலோமீட்டர் அவர்கள் சுங்கவரியின்றி பயணம் செய்யலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback