கலைஞர் கடனுதவி திட்டம் ரூ.20 லட்சம் வரை கடன் Kalaignar Loan Scheme Loan up to Rs.20 Lakhs
குறுந்தொழில் நிறுவ னங்களுக்கு, 7 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் கலைஞர் கடனுதவி திட்டத்தை; தமிழக அரசின், 'தாய்கோ வங்கி துவக்கியுள்ளது. taico bank loan details in tamil
Kalaignar Loan Scheme Loan up to Rs.20 Lakhs |
குறுந்தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தாய்கோ வங்கி வாயிலாக 7 சதவீத வட்டி யில், 20 லட்சம் ரூபாய்வரை கடன் வழங்கும் கலைஞர் கடனுதவி திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
குறுந்தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங் கும் கலைஞர் கடனுதவி திட்டத்திற்க்கு நடப்பு நிதியாண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் இந்த திட்டம் தாய்கோ வங்கி வாயிலாக செயல்படுத்தப்படும் என சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் அவர்கள் சட்ட சபையில் அறிவித்தார்.
இந்நிலையில் தாய்கோ வங்கியின் அனைத்து கிளைகளிலும் இந்த சிறப்பு கடனுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு பட்டுஉள்ளது.
எனவே, கடன் தேவைப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் உங்கள் பகுதியில் உள்ள தாய்கோ வங்கியின் கிளை மேலாளர்களை அணுகலாம் என தாய்கோ வங்கி அறிவித்துள்ளது.
தாய்கோ வங்கி என்பது:-
தொழிற்கூட்டுறவுச் சங்கங்களுக்கு போதிய அளவில் கடன் வசதியளிக்க கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் வங்கிகள் தயங்கிய நிலையில், தொழிற் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வசதியளிப்பதற்கென தாய்கோ வங்கி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி, 18.9.1961 அன்று நிறுவப்பட்டது.
நபார்டு மறு நிதி உதவித் திட்டத்தினை இவ்வங்கி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மூலம் செயல்படுத்த மத்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வங்கி,சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பதுடன் பொது மக்களுக்கு நகைக் கடன், வீடுகட்ட கடன்/வீடு அடமானக்கடன், பொதுத்துறை மற்றும் அரசுத்துறைப் பணியாளர்களுக்கு தனிநபர்க் கடன் போன்ற பல்வகைக் கடன்களை அளித்து வருகிறது.
மேலும், இவ்வங்கி பொது மக்களுக்கு நகைக் கடன், வீடுகட்ட கடன்/வீடு அடமானக்கடன்மற்றும் அரசுத்துறைப் பணியாளர்களுக்கு தனிநபர்க் கடன்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு குறுகிய கால கடன்கள் மற்றும் அதிகப்பற்று கடன்கள் போன்ற பல்வகைக் கடன்களையும் அளித்து வருகிறது.
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் 47 கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.msmetamilnadu.tn.gov.in//tamil.php
Tags: தொழில் வாய்ப்பு முக்கிய அறிவிப்பு