Breaking News

ரூ.2,000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி இல்லை - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

அட்மின் மீடியா
0

ரூ.2,000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி இல்லை - 

 


டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகிய டிஜிட்டல் சேவைகளில் ₹2000க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு நிறுவனங்கள் விதிக்கும் GATEWAY FEESக்கு 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 54-வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியமாக ரூ.2 ஆயிரம் வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவிகிதம் வரி விதிக்கப்படுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில்

ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு இப்போதைக்கு 18% வரி இல்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தணைக்கு 18% வரிவிதிக்க வேண்டும் என்ற முன்மொழிவு குறித்து மேலும் விரிவாக ஆலோசிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் பிட்பமண்ட் ( fitment) கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.என செய்தி வெளியாகி உள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback