Breaking News

இலங்கையில் பழைய விசா நடைமுறை.. 24 மணி நேரத்தில் விசா பெற்றுக்கொள்ளலாம் அதிபர் அநுர குமார திசநாயக்க அறிவிப்பு! Sri Lanka visa applications are now available under the previous system

அட்மின் மீடியா
0

இலங்கையில் பழைய விசா நடைமுறை.. 24 மணி நேரத்தில் விசா பெற்றுக்கொள்ளலாம் அதிபர் அநுர குமார திசநாயக்க அறிவிப்பு! Sri Lanka visa applications are now available under the previous system, with effect from midnight today

பழைய நடைமுறைப்படி 24 மணி நேரத்திற்குள் விசா பெற்றுக்கொள்ள முடியும். VFS நிறுவனத்திற்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால் வெளிநாட்டினர் சிக்கலை எதிர்கொண்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பை அடுத்து புதிதாக பதவியேற்றுள்ள இலங்கை அரசு நடவடிக்கை.

இன்று 26.09.2024 நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.



இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

விசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் எளிதாக விசா பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டிவர்கள் இப்போது ஆன்லைனில் விசா பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback