Breaking News

செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை பூமியை சுற்றும் 2 வது நிலவு முழு விவரம் இதோ mini moon tamil

அட்மின் மீடியா
0
வானில் நடக்கும் அதிசயம்  பூமியை PT5 என்ற குறுங்கோள் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை இந்த விண்கல்லை “இரண்டாவது  நிலவு” என ஆராய்சியாளர்கள் கூறுகின்றார்கள்

mini moon tamil
mini moon tamil


பூமியின் "மினி நிலவு" பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:-

செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை பூமிக்கு தற்காலிகமாக 2024 PT5 எனப்படும் ஒரு சிறுகோள் இரண்டாவது நிலவாக இருக்கும். 

2024 PT5 என்கின்ற ஒரு சிறுகோள் தோராயமாக 10 மீட்டர் விட்டம் கொண்டது. மிகவும் சிறிய அளவு காரணமாக பூமியிலிருந்து நாம் அதனை பார்க்க முடியாது இந்த சிறுகோள் 2024 ஆகஸ்ட் 7 அன்று ஆஸ்டிராய்ட் டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்' எனும் வானியல் அமைப்பு மூலம் 2024 PT5 எனும் விண்கல்லை  நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா. நாசா அமைப்பு பூமியை சுற்றி வரும் விண்கற்கள் மற்றும் வான்பொருட்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 2024 PT5 என்ற ஒரு சிறிய விண்கல்  பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு அடுத்து வர இருக்கும் மாதங்களில் பூமியின் அருகே சுற்றி வரும் எனத் தெரிவித்துள்ளது

அதாவது பூமியின் ஈர்ப்பு விசையால் நிலவு எப்படி நம்மை சுற்றி வருகிறதோ அதேபோல இந்த விண்கல்லும் நம்மை சுற்றி வரும் அதன் பின்னர் அது தன்னுடைய பாதையை நோக்கி மீண்டும் தள்ளப்பட்டு நகர்ந்து போய்விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

சுற்றுப்பாதை வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1838938863902863822

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback