Breaking News

இலங்கை அதிபர் தேர்தலில் வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை முழு விவரம்

அட்மின் மீடியா
0

இலங்கை அதிபர் தேர்தலில் வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை

 


இலங்கை வரலாற்றில் முதன் முறையாக விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது  அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் 50% சதவீத வாக்குகளை பெறாததால் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது  தேர்தலில் முதல் விருப்பம், 2-ம் விருப்பம், 3-ம் விருப்பம் என்ற அடிப்டையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்

இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2ஆம் விருப்ப வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும், முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறவில்லை. இதனால், வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்த எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. 

முதல் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அநுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்த வாக்குகள் மட்டுமே 2வது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்படும். இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்

அதாவது ரேங்கிங் அடிப்படையில், Second Rank, Third Rank என்ற வகையில் இந்த வாக்கு எண்ணிக்கை அமையும். இந்த சுற்றில், இரண்டு வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள், மொத்த வாக்குகளுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு எந்த வேட்பாளர் 50 விழுக்காடு வாக்குகளை பெறுகிறாரோ அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இந்நிலையில் 2ஆவது விருப்ப வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரா குமார திஸநாயக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் 

சஜித் பிரேமதாசவை விட 6.83 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அநுரா குமார திஸநாயக முன்னிலையில் இருந்து வருகின்றார்

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback