சுய தொழில்வாய்ப்பு - பேக்கரி பொருட்கள் தயாரிக்க 3 நாள் பயிற்சி மற்றும் சான்றிதழ் தமிழக அரசு ஏற்பாடு முழு விவரம் Bakery Products Training
சென்னையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க 3 நாள் பயிற்சி மற்றும் சான்றிதழ் முழு விவரம்
தமிழகத்தில்
மாநில அரசு சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்
சார்பில் பல்வேறு தொழில் சார்ந்த வழிக்காட்டுதல்கள், பயிற்சிகள்
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 வரை பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடக்கிறது
Bakery products preparation training on behalf of Tamil Nadu Government Under the Entrepreneurship Development Program of Tamil Nadu Government, bakery products preparation training is taking place from September 11th to 13th from 9.30 am to 6 pm.
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றால் கிடைக்கும் தன்மை, கருவிகள் மற்றும் உபகரணங்கள், இயந்திரங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்படும்.
மேலும் ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்க வைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள், கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியான 10ம் வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றி கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032 என்ற முகவரியை அணுகலாம். மேலும் விவ்ரங்களுக்கு 86681 02600, 70101 43022 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு :-https://www.editn.in/training?id=2536
Training/Workshop/
Program Name EDP on Bakery Products Training
Venue
Chennai
Contact Email
tc4@gmail.com
Contact Phone
04422252081
Training Fee Amount
5000/-
Training Start Date 2024-09-11
Training End Date 2024-09-13
Duration 3 Days
Small Content Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing an 3 day Entrepreneurship Development program on “Bakery Products Training” from 11.09.2024 to 13.09.2024 (Time: 9.30 am to 6.00pm) at EDII, Chennai – 600 032.
Description
Government certificate will be issued Pre- registration compulsory
Contact details: 8668102600 / 7010143022
Registration fee: 5000/-
Name. Director, EDII A/C no 144701000000817, Bank name. IOB SME Guindy SB IFSC code. IOBA0001447
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு