பெங்களூருவில் இளம்பெண் படுகொலை 30 துண்டுகளாக வெட்டி உடலை பிரிட்ஜில் அடைத்து வைத்த கொலைகாரன் முழு விவரம் Bengaluru horror Woman's body Cut into 30 pieces stuffed in fridge
பெங்களூருவில் வயாலிகாவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முனேஷ்வரா பிளாக் 4வது கிராசில் உள்ள ஒரு வீட்டில் வெளிமாநிலத்தை சேர்ந்த மகாலட்சுமி (26) என்பவர் வசித்துவந்தார். Bengaluru horror Woman's body Cut into 30 pieces stuffed in fridge
இந்நிலையில் நேற்று இவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், பெண்ணின் தாய் மற்றும் அக்கா ஆகிய இருவரும் அவரை பார்க்க வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் உடல் பல துண்டுகளாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
Bengaluru horror Woman's body Cut into 30 pieces stuffed in fridge |
கடந்த சில வருடங்களாக பெங்களூருவில் வசித்து வந்த அவர், சமீபத்தில் வயாலிக்காவல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த வீட்டில் பெண் தனியாக வசித்து வந்ததாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பெங்களூருவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.
கொலையை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கைரேகை நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
Bengaluru horror Woman's body Cut into 30 pieces stuffed in fridge |
பெங்களூருவில் மல்லேஸ்வரத்தை அடுத்த முனேஷ்வரா பிளாக்கில் ஜெயராம் என்பவரது வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருக்கும் அந்த பெண் 4-5 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், கொலையாளி அந்த பெண்ணுக்கு தெரிந்தவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 30க்கும் அதிகமான துண்டுகளாக வெட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர். கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags: இந்திய செய்திகள்