Breaking News

குடிநீர் வரியை ஆன்லைன் மூலம் கட்ட 30-ம் தேதி கடைசி நாள் சென்னை குடிநீர் வாரியம்

அட்மின் மீடியா
0

சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி, கட்டணங்களை 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.


இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; 

சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களையும் கடைசி நாளான செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரி செலுத்த ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்களும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களும் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும்.வரி, கட்டணங்களை காசோலை, வரைவோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் காசோலை / வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 

மேலும், நுகர்வோர் தங்களது நிலுவை தொகையை https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login> என்ற இணையதளம் வழியாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். இ-சேவை மையங்கள், யூபிஐ கியூஆர் குறியீடு போன்ற முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்களை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் குடிநீர் வரி கட்ட இங்கு கிளிக் செய்யவும்

https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login

பதிவு நடைமுறை 

புதிய அமைப்பின் மூலம், வாடிக்கையாளர்கள் இணைய அடிப்படையிலான பில்லிங் மற்றும் கலெக்ஷன் சிஸ்டத்திற்குப் பதிவு செய்யலாம். நுகர்வோர் பதிவு செய்ய CMC எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பதிவு செய்ய அனுமதிக்கப்படாது. கணினி உருவாக்கிய மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டு நுகர்வோர் மொபைல் எண்ணை சரிபார்க்க வேண்டும். சரிபார்க்கப்பட்டதும், நுகர்வோர் பதிவு செய்யப்பட்டு ஆன்லைனில் பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார். 

பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் / மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் உள்நுழையவும் பதிவுசெய்த பிறகு, நுகர்வோர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்/மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல் (பதிவின் போது கொடுக்கப்பட்ட) பயன்படுத்தி உள்நுழையலாம். 

01.10.2023 முதல் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை இ-சேவை மையங்கள்மற்றும் டிஜிட்டல்/காசோலை/வரைவோலைகளாக மட்டுமே செலுத்திட வேண்டும்.ரொக்கமாக பெறப்பட மாட்டாது.

நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலைப் (online Gate Way) பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் (Debit நெட் பேங்கிங் Banking) மூலமாக பணம் கார்டு செலுத்தலாம். UPI, QR குறியீடு மற்றும் போன்ற கட்டண முறைகளையும் Card) மற்றும் பயன்படுத்தி நுகர்வோர்கள் (Net PoS தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback