300 அடி நீளத்திற்கு கொடைக்கானலில் இரண்டாக பிளந்த நிலம் காரணம் தெரியாமல் மக்கள் அதிர்ச்சி
அட்மின் மீடியா
0
கொடைக்கானலில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கீழ் கிளாவரை பகுதிக்கு ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வருவது வழக்கம்.
இந்நிலையில் குழாயில் நீர் வராததால் கீழ் கிளாவரை பகுதியில் இருந்து சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கூனிப்பட்டி என்கிற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கும் மேல் நிலம் இரண்டாக பிளந்து இருந்துள்ளது இதனைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்