தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டங்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் முழு விவரம் District wise IAS to monitor the implementation of special schemes of Tamil Nadu Government
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்க மாவட்டம் வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு District wise IAS to monitor the implementation of special schemes of Tamil Nadu Government. Chief Secretary Muruganandam orders appointing officers
மாதந்தோறும் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுக் கூட்டம் நடத்தவும் உத்தரவு
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்க மாவட்டம் வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில், “சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின் படி கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள். மாதம் ஒரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத்துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்