திரைப்படப் பாடகர் மனோவின் மகன்கள் சாஹீர், முகமது ரஃபி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு நடந்தது என்ன முழு விவரம்
திரைப்படப் பாடகர் மனோவின் மகன்கள் சாஹீர், முகமது ரஃபி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு நடந்தது என்ன முழு விவரம்
திரைப்படப் பாடகர் மனோவின் வீடு சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கிறது. இவர்கள் வீடு அருகில் உள்ள கால் பந்து விளையாட்டுப் பயிற்சி மையத்தில் பயிற்ச்சிக்காக வந்த கல்லூரி மாணவர் கிருபாகரன் மற்றும் அவரது 16 வயது நண்பர் நிதிஷ் பயிற்சி முடித்து அருகில் உள்ள உணவகத்திற்க்கு சென்றுள்ளார்கள்
கிருபாகரன் என்ற சிறுவனையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் பின்னனி பாடகர் மகன்கள் 2 பேரு அவர் உடன் வந்த 2 பேரும் அவர்களிடம் வாக்கு வாதம் செய்தனர் அதன் பின்பு கைகலப்பாக மாறியயதில் கல்லூரி மாண்வர் கிருபாகரனையும், அவருடன் இருந்த 16 வயது சிறுவனையும் அவர்கள்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளார்கள்
இந்த
தாக்குதலால் அந்த 16வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் தாக்கப்பட்ட கிருபாகரன் எனும் இளைஞரும் சிறுவன் நிதிஷூம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிருபாகரன் சார்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பேரில் வளசரவாக்கம் போலீசார் கல்லூரி மாணவர், சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மகன்கள் முகமது ரஃபிக், சாஹிர் மற்றும் உடன் இருந்தவர்கள் மீது சென்னை வளசரவாக்கம் போலீசார் கொலை மிரட்டல், தாக்குதல் நடத்துதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்
மேலும் பாடகர் மனோவின் வீட்டிற்கு சென்று அவரின் மகன்களைத்தேடினர். ஆனால் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட விக்ரம், தர்மா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார தேடி வருகின்றனர்
Tags: தமிழக செய்திகள்