Breaking News

லெபனானில் நேற்று பேஜர்கள் வெடித்துச் சிதறி பலர் உயிரிழந்த நிலையில், இன்று வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து 3 பேர் பலி

அட்மின் மீடியா
0

லெபனானில் நேற்று பேஜர்கள் வெடித்துச் சிதறி பலர் உயிரிழந்த நிலையில், இன்று வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து 3 பேர் பலி 

 


லெபனானில் நேற்று பேஜர்கள் வெடித்துச் சிதறி பலர் உயிரிழந்த நிலையில், இன்று பல வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததால் பலர் காயமடைந்தனர்ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இந்த தொடர் தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது

கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையேயான போர் துவங்கியது. ஹமாஸ் அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லெபனானில் நேற்று ( செப்.,17) ஒரே நேரத்தில், 1000க்கும் மேற்பட்ட பேஜர் எனப்படும் தகவல்களை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு சாதனம் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். .

இந்நிலையில் இன்று ( செப்/.18) மீண்டும் வாக்கி-டாக்கி எனப்படும் தகவல் பரிமாற பயன்படுத்தப்படும் சாதனம் மூலம் தெற்கு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர்.மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கும் இஸ்ரேல் காரணம் என கூறப்படுகிறது.

ஈரான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல். பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை தொடர்ந்து தொலைபேசி, சோலார் பேனல்களும் வெடித்துச் சிதறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback