Breaking News

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் இன்று 3 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் இன்று 3 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் Temperature will increase further in Tamil Nadu today heavy rain in 3 districts Chennai Meteorological Center

சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

21.09.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

22.09.2024 மற்றும் 23.09.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

24.09.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

25.09.2024 முதல் 27.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback