Breaking News

ஆம்பூர் மேம்பால கட்டுமாண பணி - சாரம் சரிந்து விழுந்து 3 பேர் காயம்

அட்மின் மீடியா
0

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மேம்பால கட்டுமான பணியின் போது திடீரென சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று  மேம்பாலத்தின் சாரம் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்த பிற தொழிலாளர்களும், பொதுமக்களுடம் இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback