தமிழக அமைச்சரவையில் இருந்து 3 பேர் பதவி நீக்கம் யார் யார் தெரியுமா
தமிழக அமைச்சரவையில் இருந்து 3 பேர் பதவி நீக்கம் யார் யார் தெரியுமா
தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து புதிய மாற்றங்கள் குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதன்ப்படி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜ கண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீக்கம்:-
தற்போதய, அமைச்சர்கள் மனோ தங்கராஜ்,
செஞ்சி மஸ்தான்,
கா.ராமச்சந்திரன்
ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சர்கள்:-
செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ,கோவி. செழியன், ராஜேந்திரன் போன்றோருக்கு புதிதாக அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்