Breaking News

தற்கொலை இயந்திரத்தில் உயிரை மாய்த்த முதல் பெண் - 4 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம் American woman dies in first use of controversial suicide pod

அட்மின் மீடியா
0

சுவிட்சர்லாந்தின் வடக்குப் பகுதியில், சுவிஸ்-ஜெர்மன் எல்லைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இந்த தற்கொலை கேப்சூலை பயன்படுத்தி 64 வயது பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் Several arrested after American woman dies in first use of controversial suicide pod

தற்கொலை இயந்திரம் மூலம் ஒருவர் தற்கொலை கொள்வது இதுவே முதல் முறை. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது. 

Swiss police make arrests over suspected death in suicide
 Swiss police make arrests over suspected death in suicide


தற்கொலை செய்து கொள்வதற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கி இருந்தாலும், தற்கொலை எந்திரத்தில் நைட்ரஜன் பயன்படுத்த சட்டப்படி அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. .

தி லாஸ்ட் ரிசார்ட் என அழைக்கப்படும் ஒரு அமைப்பு, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்கோ என்ற புதிய தற்கொலைப் பாட் எனப்படும் கருவியை தயார் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான சரியான காரணத்தை தெரிவித்தாலோ அல்லது அவரது மரணத்திற்கு காரணமான காரணியை நிரூபித்தாலோ அவர் தற்கொலை செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறார். 

அந்த இயந்திரத்தில் ஏறி படுத்ததும் நீங்கள் சாக விரும்பினால் பட்டனை அழுத்தவும் என்ற குரல் வந்ததும் பட்டனை அழுத்தினால் அடுத்த ஐந்து நிமிடத்தில் வலியின்றி உயிர் பிரிந்துவிடுமாம். 

பட்டனை அழுத்தியதும் ஆக்சிஜன் வாயும் குறைக்கப்பட்டு நைட்ரஜன் வாயும் நிரப்பப்படுவதால் ஹைபோக்சியா பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டு மயங்கிய நிலையிலேயே உயிர் பிரிந்துவிடுமாம். அதாவது இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தற்கொலை செய்பவர்கள் வலியின்றி இறந்துவிடுகிறார்கள். என கூறப்படுகின்றது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback