Breaking News

காபியில் சயனைடு கலந்து கொலை செய்யப்பட்ட ஆஷீகா பர்வீன் - கணவர், மாமியார், மைத்துனர் உள்ளிட்ட 4 பேர் கைது ashika parveen was killed by mixing cyanide in her coffee with dowry in Ooty

அட்மின் மீடியா
0
காபியில் சயனைடு கலந்து கொலை செய்யப்பட்ட ஆஷீகா பர்வீன் - கணவர், மாமியார், மைத்துனர் உள்ளிட்ட 4 பேர் கைது 
 
உதகையில் கடந்த மாதம் 23ம் தேதி இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், கணவர், மாமியார், மைத்துனர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
Police have arrested 4 people including husband, mother-in-law and brother-in-law in the case of the mysterious death of a young woman on 23rd of last month 
 

 
வரதட்சணை விவகாரத்தில் காபியில் சயனைடு கலந்து ஆசிகா பர்வீன் கொல்லப்பட்ட நிலையில், கணவர் இம்ரான் கான், மாமியார் யாஸ்மின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் 

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹருல்லா இவரது மனைவி யாஸ்மின் இவர்களுக்கு இம்ரான், முக்தார் ,என, 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி வண்டிச்சோலை பகுதி அப்துல் சமது என்பவரது மகள் நிலாபர் நிஷா தம்பதியின் மகள் ஆஷிகா பர்வீன் என்பவரை இம்ரான் காதலித்து திருமணம் செய்துள்ளார் இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23 ம் தேதி  மர்மமான முறையில் ஆஷிகா பர்வீன் இறந்து கிடந்தார். அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்திகொண்டார் என கூறப்பட்ட நிலையில் ஆஷிகா பர்வீன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இம்ரானின் குடும்பத்தினர் தான் எனது மகளை கொலை செய்திருக்கலாம் எனவும் அவரது பெற்றோர் ஊட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 194ன் கீழ்  போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், காபியில் சயனைடு விஷம் கலந்து ஆஷிகா கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து விசாரணை நடத்தியதில்

ஆஷிகா பர்வீனின் கணவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்  வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதில் ஏற்பட்ட பிரச்சினையில் தான் அவர்கள் சயனைடு கலந்த கலந்த காபியை கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இம்ரான் மற்றும் யாஸ்மின், முக்தார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

Jawaharullah hails from Bennett Market near Ooty, Nilgiris District and his wife Yasmin has 2 sons, Imran and Mukhtar.In this case, 2 years ago, Imran fell in love with Ashika Parveen, the daughter of Nilabar Nisha, the daughter of Abdul Samad of Ooty Vandicholai, and they have a 2-year-old child.

 In this case, Ashika Parveen was found dead in a mysterious manner on June 23. While it was said that she had committed suicide by consuming poison, her parents filed a complaint at the Ooty police station, suspecting the death of Ashika Parveen and saying that Imran's family might have killed my daughter.

While the police registered a case of suspicious death, the post-mortem report revealed that Ashika was killed by cyanide poisoning in coffee. After that, the police arrested Imran and his family and interrogated him It has been revealed that Ashika Parveen's husband and their family tortured her by asking for dowry and it was because of this problem that they killed her by giving her coffee mixed with cyanide. Subsequently, the police have arrested 4 people including Imran, Yasmin and Mukhtar.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback