Breaking News

குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு விரைவில் அறிவிப்பு TNPSC தகவல்

அட்மின் மீடியா
0

குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு விரைவில் அறிவிப்பு TNPSC தகவல்

குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ல் தொடங்கி பிப். 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் தேர்வு ஜூன் 9-ல் நடந்தது.

இந்நிலையில் தேர்வுக்குப் பின் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,724ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வந்த நிலையில் கணக்கெடுப்பு நடக்கிறது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback