Breaking News

குரோம்பேட்டையில் அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் சட்டக்கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது! நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

குரோம்பேட்டையில் அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் சட்டக்கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது! நடந்தது என்ன முழு விவரம்

  • சென்னை, குரோம்பேட்டையில் அரசு மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்

  • காரை உரசியதால், மதுபோதையில் இருந்த மர்ம கும்பல் தாக்கியதாக குற்றச்சாட்டு

  • தாக்குதல் குறித்து ஓட்டுநர், நடத்துனர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் 

  • ஜிஎஸ்டி சாலையில் நடந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதித்தது

சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சட்ட கல்லூரி மாணவி, அவருடைய கணவர் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து நிறுத்தும் இடம் அருகே நிறுத்திருந்த ஜீப் மீது பேருந்து உரசி உள்ளது. உடனே அதிலிருந்து நான்கு பேர் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதம் செய்தனர் அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது

உடனே அந்த வழியாக வந்த பேருந்துகளின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

உடனடியாக தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் இடத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

காயமடைந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாகச் சட்டக்கல்லூரி மாணவி பிரதீபா ஷாலினி, அவரது கணவர் ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback