471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி senthil balaji released from jail
471 நாட்கள் சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார் செந்தில் பாலாஜி
முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 471 நாட்கள் கழித்து இன்று வெளியே வந்துள்ளார்
senthil balaji released from jail |
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 2023 ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதுவரை 58 முறைக்கும் மேல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு சுமார் 471 நாட்கள் சிறையில் இருந்தார் இந்நிலையில் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஜாமீன் நிபந்தனைகள்
சாட்சிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது மீறி சாட்சிகளுடன் தொடர்பு கொண்டால், ஜாமீன் ரத்து செய்யப்படும்
ஒவ்வொரு திங்கள், வெள்ளி காலை 11 - 12 மணிக்குள் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் ஆஜராக வேண்டும்
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று விசாரணை அதிகாரிகள் முன்பு செந்தில்பாலாஜி ஆஜராக வேண்டும்
பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி ஒப்படைக்க வேண்டும்
நீதிமன்ற உத்தரவுகளை ஏற்று விசாரணைக்கு செந்தில்பாலாஜி ஒத்துழைக்க வேண்டும் தேவையற்ற காரணங்களை கூறி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்து இருந்தது .
அதனை தொடர்ந்து இரு நபர் உத்தரவாத பிணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றது அதனை தொடர்ந்து இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி
இந்நிலையில் திமுக முப்பெரும் விழா நாளை காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள நிலையில் முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் எதுவும் உத்தரவு பிறப்பிக்காத நிலையில், அமைச்சரவை மாற்றத்தில் செந்தில்பாலாஜியின் பெயரும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: அரசியல் செய்திகள்