லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு 1600க்கும் அதிகமானோர் படுகாயம் முழு விவரம் Israel's heavy attack on Lebanon
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு 1600க்கும் அதிகமானோர் படுகாயம் முழு விவரம்
லெபனான் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 492 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழு வடக்கு இஸ்ரேல் பகுதியில் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது
தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட மொத்தம் 19 இடங்களில் இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 492 பேர் பலியாகி உள்ளார்கள் மேலும் 2000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் ஹமாஸின் போர்க்கள தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இஸ்ரேல்இது தொடர்பாக ஹமாஸின் ஆயுதப்படை பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போர்கள தளபதி மஹ்மூத் அல் நாடர் (Mahmoud Al Nader) கொல்லப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1838209540535333137
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ