Breaking News

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - மாணவர்கள் 4 பேர் பலி.!

அட்மின் மீடியா
0

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - பள்ளி மாணவர்கள் 4 பேர் பலி.!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் மினி பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

 


இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர் 

உயிரிழந்தவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் என்றும், ஒருவர் கல்லுரி மாணவர் என்றும் அவர்கள் ரீதர், நிதிஷ்குமார், வாசு மற்றும் சதீஸ் குமார் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback