Breaking News

4 புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு யார் யாருக்கு எந்த இலாக்கா முழு விவரம்

அட்மின் மீடியா
0

புதிதாக பொறுப்பேற்றுள்ள 4 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.அதன் அடிப்படையில் இன்று (29.9.2024) மதியம் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 



அப்போது பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துவைர்த்தார். இதன்படி முறையே ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி செழியன், எஸ்.எம்.நாசர் வரிசையாக அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்கள் உள்பட அனைத்து அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

இதனை தொடர்ந்து, சற்று நேரத்திலேயே புதிதாக பதவியேற்ற நான்கு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

அதன்படி இன்று புதிதாக பொறுப்பேற்ற 

இரா.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கோவி. செழியனுக்கு உயர்க்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நாசர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சார மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback