Breaking News

காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்

அட்மின் மீடியா
0

காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்

சேலம் மாவட்டத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.25) விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்



புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் பகுதியில் நீண்ட நேரமாக ஒரு கார் ஒரே இடத்தில் நிற்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரின் கதவின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது 3 பெண்கள் உட்பட 5 பேர் காருக்குள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 5 பேரின் உடல்களையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

போலிசாரின் விசாரனையில் காரில் இருந்தவர்கள் சேலத்தை சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி நித்தியா, அவரது தாயார் சரோஜா, மகன் தீரன், மகள் நிஹாரிகா ஆகியோர் எனவும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது

 5 பேரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் தொழில் நஷ்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணம் கேட்பதால் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறோம்' என எழுதப்பட்டிருந்தது.

மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக  5 பேரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரனை நடத்தி வ்ருகின்றார்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback