பெண்களுக்கு விவசாயம் நிலம் வாங்க 5 லட்சம் மானியம் தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு விவசாயம் நிலம் வாங்க திட்டச் செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கு நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- விண்ணப்பதாரர் 18-55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் எந்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது.
- விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்
- இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
- முத்திரை தான் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்
- விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
- வாங்கிய நிலம் பத்து ஆண்டுகளுக்குள் விற்கப்படக்கூடாது
- பயனாளிகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் கடனாக பெற்று நிலம் வாங்கலாம்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு