Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் சுற்றுலா வாகனம் மோதி கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு 16 பேர் காயம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் சுற்றுலா வாகனம் மோதி கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு முழு விவரம் 6 people killed and 16 injured in an accident where a tourist vehicle collided with a roadside tree near Ulundurpet full details

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் இருந்த மரத்தின் மீது சுற்றுலா வேன் மோதி #விபத்து 6 பேர் உயிரிழப்பு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மேட்டத்தூர் என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளது

2 பெண்கள் உள்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம் - மேலும் 16 பேர் படுகாயம்


6 people killed
6 people killed

ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வாழைப்பந்தல்  மாம்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த 20 பேர் வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேட்டத்தூர் எனும் இடத்தில் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இவர்களது சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருநாவலூர் போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback