6 பிள்ளைகள் இருந்தும் 86 வயதில் படுத்த படுக்கையாக கிடந்த மனைவியை கவனிக்க முடியாமல் கொன்ற 90 வயது கணவர் முழு விவரம்
6 பிள்ளைகள் இருந்தும் 86 வயதில் படுத்த படுக்கையாக கிடந்த மனைவியை கவனிக்க முடியாமல் கொன்ற 90 வயது கணவர் முழு விவரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருத்தங்கோடு, ஆசாரிவிளை கிராமத்தில் வசித்து வரும் சந்திர போஸ் (வயது 90). இவரது மனைவி லட்சுமி 84 வயது இவர் பனைமரம் ஏறும் பணி செய்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என ஆறு பேர் அனைவருக்கும் திருமணம் நடந்து தற்போது தங்களது குழந்தை மற்றும் பேரக்குழந்தையுடன் தனித்தனியே தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு மகன்கள் மற்றும் மகள்கள் அவரவர் குடும்பத்தினருடன் தனியாக சென்றுவிட்டதால் தனது தாய் தந்தையரை மறந்துவிட்டனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்ட லட்சுமி படுத்த படுக்கையாகி விட்டார்
மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சந்திரபோஸ்க்கும் இரு கண் பார்வையும் பறி போனது இதனால் தனது மனைவியை பராமரிக்க முடியாமல் சிரமபட்டுள்ளார் மேலும் தனது மனைவிக்கு உடல் முழுவதும் கொப்புளங்களால் வலி பொறுக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மனைவியை கருணைக்கொலை செய்ய முடிவெடுத்து அவர் நேற்று காலை நேரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ளார்
மதிய நேரத்தில் இளைய மகன் சாந்தகுமார் உணவு கொடுக்க வந்தபோது தந்தை அழுதபடி இருப்பதை கவனித்து உள்ளே சென்ற பார்த்தபோது தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், முதியவர் சந்திரபோஸின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்