Breaking News

பெரியகுளம் அருகே பரபரப்பு கோயிலில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை 70 வயது பூசாரி கைது 70 year old priest sexually assaults minors in temple

அட்மின் மீடியா
0

பெரியகுளம் அருகே பரபரப்பு கோயிலில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை 70 வயது பூசாரி கைது 70-year-old priest sexually assaults minors in Tamil Nadu temple by luring them with sweets; arrested after protests.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சிறுமிக்கு இனிப்பு வழங்கி கோயிலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பூசாரி திலகர் (70) கைது செய்யப்பட்டுள்ளார்

சிறுமி அளித்த தகவலில் அங்கு கூடிய மக்களிடம் இருந்து தப்பிக்க கோயிலுக்குள் பூசாரி ஒளிந்துகொண்டார் போலீசார் வந்து பூசாரியை மீட்ட்டு போக்சோ வழக்கில்  கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்

70 year old priest sexually assaults minors in temple


தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவிலில் திலகர் (வயது 70) முதியவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். 

நேற்று முன்தினம் மாலை கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு கொடுத்து கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் சிறுமி பதறி அடித்து கோவிலில் இருந்து வந்து நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி மக்கள் கோவில் முன்பாக கூடியதை தொடர்ந்து, உறவினர்கள் தாக்க வந்து விடுவார்கள் என எண்ணி கோவில் பூசாரி கோவிலை பூட்டிக் கொண்டு கோவிலுக்குள் ஒளிந்து கொண்டார். 

இதனை அடுத்து பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கோவிலை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருந்த பூசாரியை அழைத்து கோவிலைத் திறந்து கோவிலுக்குள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பூசாரிதிலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்துள்ளனர்

Give Us Your Feedback