Breaking News

உயர்ந்தது தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ. 7000 த்திற்க்கு விற்பனை gold rate today

அட்மின் மீடியா
0

உயர்ந்தது தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ. 7000 த்திற்க்கு விற்பனை gold rate today

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 7000ஐ தொட்டுள்ளது.

gold rate today
gold rate today

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை சவரனுக்கு ரூ.5ஆயிரம் வரை சரிந்தது. ஆனால்  கடந்த 10 நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ. 7 ஆயிரத்தை தொட்டுள்ளது. அதன்படி கடந்த 13ம் தேதி சவரனுக்கு ரூ. 960ம், கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு 480 ரூபாயும், கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு 600 ரூபாயும், நேற்றைய தினம் ரூ.160ம் என தொடர்ந்து ஏற்றம் கண்டது. 

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.160 உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் ஒரு சவரன் ரூ. 56,000 என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback