Breaking News

விதவை திருமண உதவித் திட்டம் 8 கிராம் தங்கம் ரூ 50,000 தமிழக அரசு அறிவிப்பு widow remarriage scheme in tamilnadu

அட்மின் மீடியா
0

Dr.DHARMAMBAL AMMAIYAR NINAIVU WIDOW REMARRIAGE ASSISTANCE SCHEME

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்

தமிழ்நாடு அரசு, விதவை பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு தனியாக நிதியுதவி அளிக்கும் வகையிலும் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

 

widow remarriage scheme in tamilnadu
widow remarriage scheme in tamilnadu


நிபந்தனைகள்:-

மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணின் வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

விதவை பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கு முதல் திருமணமாக இருக்க வேண்டும்

மறுமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றிதழ்:-

பெண்ணிற்கான வயது சான்றிதழ்

முதல் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ்

முதல் கணவரின் இறப்பு சான்றிதழ்

இரண்டாம் கணவருக்கு இது தான் முதல் திருமணம் என்பதற்கான சான்றிதழ்

திருமண அழைப்பிதழ்

 உதவித்தொகை:-

பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25,000/- (ம) 8 கிராம் தங்க நாணயமும், 

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/- (ம) 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. 

விண்ணப்பிப்பது எப்படி:-

அருகில் உள்ள இ-சேவை மையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு, அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback