Breaking News

இந்து சமய அறநிலையத்துறையில் டிரைவர் வேலைக்கு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் Candidates who have passed 8th standard can apply for driver job in Hindu Religious Charities Department

அட்மின் மீடியா
0

இந்து சமய அறநிலையத்துறையில் ஓட்டுநர் வேலைக்கு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் Candidates who have passed 8th standard can apply for driver job in Hindu Religious Charities Department

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட நிரந்தர பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி:-

ஓட்டுநர்

கல்வி மற்றும் இதர தகுதிகள் விபரம் 

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

ஒரு வருடம் ஓட்டுநர் முன்அனுபவம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

நல்ல உடல் தகுதியுடனும் இருக்க வேண்டும்.

பொதுவான தகுதிகள்:-

1. விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், 01.07.2024 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும் 45 வயது நிறைவு செய்யாதவராவும் இருக்க வேண்டும்.

2. விண்ணப்பங்கள் வந்த சேர வேண்டிய கடைசி நாள் 04.10.2024 பிற்பகல் 5.00 மணி வரை 

3. விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி "உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம், நாமக்கல் மாவட்டம் -637 211." 

4. விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.tiruchengodearthanareeswarar.hrce.tn.gov.in  www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

5. விண்ணப்ப கட்டணம் கிடையாது. 

6. இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்தில் கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

நிபந்தனைகள் :-

1.விண்ணப்பதாரர் 01.07.2024 -ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

2. இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3. இவ்விளம்பரம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு உரிய காலத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

4. விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை. குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox Copy Only) பெற்று அனுப்பப்பட வேண்டும். 

5. விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும். 

6. விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும் கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும். 

7. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும். பணியிட மாறுதல் செய்யப்படுவார். 

8. பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

9. விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். 

10. நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது.

11. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின் போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும். 

12. விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதியளிக்க வேண்டும். தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் ஏதேனும் அளித்து பணி நியமன ஆணை பெறப்படும்பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்தும். சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவர். 

13. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு பின்னர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு திருக்கோயிலிருந்து எவ்வித தகவலும் அனுப்பப்படமாட்டாக

14. விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உண்மைத் தன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். 

15. திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் அவர்களின் வாரிசுதாரர்கள் அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள், இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். 

16. உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் நிராகரிக்கப்படும். 

17. பணி நியமனம் அரசாணை எண்.114 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அ.நி.4-2) நாள்.03.09.2020 விதிகளுக்குட்பட்டது. அரசாணை எண்.219 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் விதிகளுக்குட்பட்டது. (அ.நி.4-2) .02.09.2022 

18. அரசாணை (நிலை) எண்.114 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அ.நி.4-2) துறை நாள்.03.09.2020 விதி எண்.9-ன்படி முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் பணிபுரியும் தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம். 

19. தேர்வு முறையானது அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். 

20. விண்ணப்பப் மற்றும் படிவத்தினை www.tnhrce.gov.in www.tiruchengodearthanareeswarar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். 

21. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் "ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பம்" என தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் 637 211 τότ முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

தபால் முகவரி :-

உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்,

திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம்,

நாமக்கல் மாவட்டம் - 637 211.

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

04.10.2024 மாலை 5 மணி வரை

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/192/document_1.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback