Breaking News

லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய ஆயிரக்கணக்கான பேஜர்கள் 9 பேர் உயிரிழப்பு 2,750 பேர் படுகாயம் நடந்தது என்ன வீடியோ

அட்மின் மீடியா
0

லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய ஆயிரக்கணக்கான பேஜர்கள் 9 பேர் உயிரிழப்பு 2,750 பேர் படுகாயம் நடந்தது என்ன வீடியோ At least 9 killed, thousands injured in Lebanon pager attack

லெபனான் (Lebanon) நாடு முழுவதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளது

இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,750 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.  இந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

இஸ்ரேல் (Israel) - காசா போர் ஆரம்பத்தில் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக  ஈரான் (Iran) ஆதரவுடைய ஹிஸ்புல்லா அமைப்பினர் தொலைபேசிகளை தவிர்த்து வருகின்றனர்.அதற்குப் பதிலாக பழங்கால பேஜரை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வருகின்றனர். 

ஹிஸ்புல்லா அமைப்பினர்  பயன்படுத்தும் பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.லெபனான் தலைநகர் பெய்ரூட்உட்பட அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேஜர்கள் வெடித்துச் சிதறியுள்ளன. 

இதில் ஆயிரத்துக்கும்மேற்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பினர்  படுகாயமடைந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன.

பேஜரில் லித்தியம் பேட்டரி உள்ளது. இவை அதிக சூடானால் வெடித்துச் சிதறும். இஸ்ரேல் உளவுத் துறை, சைபர் தாக்குதல் மூலம் பேட்டரிகளை அதிக சூடாக்கி வெடித்துச் சிதறச் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1836251101407981754

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback