Breaking News

வெள்ளத்தில் காரில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரை ஜேசிபியால் காப்பாற்றிய நபர் என பரவும் வீடியோ ஆந்திராவில் நடந்தது இல்லை JCB driver saving people from flood

அட்மின் மீடியா
0

வெள்ளத்தில் காரில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரை  ஜேசியியால் காப்பாற்றிய நபர் என பரவும் வீடியோ ஆந்திராவில் நடந்தது இல்லை  JCB driver saving people from flood

பரவிய செய்தி:-

ஆந்திரா வெள்ளத்தில் காரில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரை காப்பாற்றிய முகம்மது சுபாகான்.JCB உதவியுடன் மீட்க முயற்சி செய்யும் முன் அவர் சொன்னது.மீட்க முடியவில்லை எனில் என் உயிர் மட்டும் போகும்.காப்பாற்றிவிட்டால் 10 பேராக வருவோம் என்று கூறினார். என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


உண்மை என்ன:-

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையை தொடர்ந்து, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் கடும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. 

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள பிரகாஷ் நகரில் உள்ள ஒரு பாலத்தில் நிரம்பி வழியும்  ஆற்று நீரில் காரில் சென்ற ஒன்பது பேர் அடித்து செல்லப்பட்டார்கள் எனவும் அவர்களை தனது உயிரை பணயம் வைத்து ஜேசிபி டிரைவர் காப்பாற்றிய வீடியோ என ஷேர் செய்கின்றார்கள் 

ஆனால் பலரும் செய்யும் அந்த வீடியோ ஆந்திரா மாநிலத்தில் நடந்தது இல்லை மாறாக சவூதி அரேபியா நாட்டில் நடந்தது ஆகும்

சவூதி அரேபியாவில் 28.04.2024 அன்று பிஷா மாகாணத்தில் ஜுவாபா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ​​அதில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது கார் சேற்று நீரில் சிக்கி, கார் மூழ்கி கொண்டிருந்தது , செய்தி அறிந்து அங்கிருந்த அய்த் பின் தகாஷ் அல் அக்லாபி,  எனபவர் தனது உயிரையும் பொர்ட்படுதாமல் தனது புல்டோசரில் இரண்டு சிவில் பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைந்து  வெள்ளத்தில் சிக்கித் தவித்த 4 பேரை மீட்டார் என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=GUoMQuqDO8I&t=1s

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://gulfnews.com/world/gulf/saudi/watch-saudi-hailed-as-hero-after-he-saves-four-from-drowning-in-bisha-floods-1.102372694

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback