எஸ்.எஸ்.ஐதராபாத் பிரியாணி பொன்னேரி கிளைக்கு சீல் உணவு பாதுகாப்பு துறை அதிரடி
எஸ்.எஸ்.ஐதராபாத் பிரியாணி பொன்னேரி கிளைக்கு சீல் உணவு பாதுகாப்பு துறை அதிரடி SS Hyderabad Biryani Ponneri branch Sealed
SS Hyderabad Biryani Ponneri branch Sealed |
கடந்த 18ம் தேதி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையின் கொடுங்கையூர் சிட்கோ நகர் கிளையில் பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையின் கொடுங்கையூர் சிட்கோ நகர் கிளை கடைக்கு சென்று ஆய்வு நடத்தி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ்.ஐதராபாத் கடையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஷ்குமார் குழுவினர் சோதனை செய்தனர் , சோதனையில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பொன்னேரி எஸ்.எஸ்.ஐதராபாத் கடைக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்! Seal Food Safety Department action for SS Hyderabad Biryani Ponneri branch
Tags: தமிழக செய்திகள்