Breaking News

சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு SWOTT அமைப்பின் மெரினா கடற்கரை சுத்தப்படுத்தும் பணியில் நீங்களும் பங்கற்கலாம் முழு விவரம் You can also participate in SWOTT's Marina Beach Cleanup on International Beach Day

அட்மின் மீடியா
0
சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு SWOTT அமைப்பின் மெரினா கடற்கரை சுத்தப்படுத்தும் பணியில் நீங்களும் பங்கற்கலாம் முழு விவரம் You can also participate in SWOTT's Marina Beach Cleanup on International Beach Day
 

உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமை, “சர்வதேச கடலோர தூய்மை தினம்“ கொண்டாடப்படுகிறது. 
அந்த வகையில் 2024 ம் வருடம் 21.09.2024 சனிக்கிழமை அன்று  கொண்டாடப்பட உள்ளது
 
அன்றைய தினம் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை கடற்கரையான மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை SWOTT என்ற தன்னார்வலர்கள் 4வது ஆண்டாக மேற்கொள்ள உள்ளார்கள்
 
 
மேலும் கடலோரப் பகுதிகளில் குப்பை போடுவதைக் குறைப்பது,  பிளாஸ்டிக்  பயன்பாட்டை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் என்ன ,மேலும் கடற்கறையை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்வது எப்படி என   விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
 
இது குறித்து  SWOTT நிறுவனர் சமீர் அவர்கள்
 
நம் கடலை காப்பதற்கு,  நம்மில் கடல் மீது அக்கறை கொண்ட சிலர் கடந்த 27 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை, சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் நாளாக அனுசரித்து உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்தி வருகின்றனர். இதனையே சர்வதேச கடலோர தூய்மை தினம் என கொண்டாடுகின்றோம்.
 
சுற்றுலா, பொழுதுபோக்கு என கடற்கரைக்கு வரும் பெரும்பாலானவா்கள் தாங்கள் உண்பதற்கு பாத்திரங்களில் உணவு கொண்டு வரும் பழக்கத்தை கைவிட்டு கடற்கரையோரங்களில் உள்ள கடைகளில் நெகிழிப்பைகளில் உணவு வாங்கிச் சென்று உண்டபின் அவற்றை கடற்கரையிலோ, கடலிலோ வீசுகின்றனா் இதனால் கடலும் கடற்கரையும் அசுத்தம் அடைகிறது.
 
மேலும், கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள், அதிக அளவில் கடலில் சென்று சேருவதால். கடலின் சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளால், கடல்வாழ் உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விகுறியாகின்றது.
 
ஆண்டு தோறும் சர்வதேச கடலோர தூய்மை தினத்தில் நம் SWOTT அமைப்பினர் கடற்கறையை  துாய்மை படுத்தும்  பணியை செய்து வருகின்றோம் அந்த வகையில் கடந்த ஆண்டு சுமார் 500 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டு மட்கும் குப்பை, மட்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது 
 
அதேபோல் இந்தவருடம் சர்வதேச கடலோர தூய்மை தினம் எதிர்வரும்  21ம் தேதி சனிக்கிழமை அன்று வருகின்றது அன்றைய தினத்தில் கல்லுாரி ,பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்
 
மேலும் கடற்கரைகளை சுத்தம் செய்து அங்குள்ள குப்பைகளை அகற்றி கடலோரப் பகுதிகளில் குப்பை போடுவதைக் குறைப்பது,  பிளாஸ்டிக்கை குறைந்தபட்ச தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, கடற்கரையில் உள்ள குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.அதனை தொடர்ந்து கடற்கரைகளில் இனி குப்பை போட மாட்டோம் கடல் வளத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்க்கவும் உள்ளார்கள் கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும்  சான்றிதழ் வழங்கப்படும் எனவும் சென்னை மெரினா கடற்கரை தூய்மை படுத்தும் பணியில் பொதுமக்கள் ஆகிய நீங்களும் பங்கேற்க்க முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என கூறினார்
 
முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
 
Eddu Enga Chennai - Namma Chennai -  Namma Pride 

NGO awaiting your support VOLUNTEERS NEEDED Join us for a Beach Clean-Up 2024 on The International Coastal Day 

நாள்:- 21 September 2024
 
நேரம் :-  6:00am - 9:00 am

இடம்:- Vivekananda House Marina Beach ,Chennai

google Location Click here: https://maps.app.goo.gl/j5Eaj92RjwMadb5g8?g_st=aw

பங்கேற்க்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும் முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
 
https://forms.gle/pFaTrMPJvEni4FLa6

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback