Breaking News

தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்த இளம் பெண் அசந்து தூங்கி விட்டதால் ரயிலை நிறுத்தி பெண்ணை எழுப்பிய ரயில் ஓட்டுநர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்த பெண் அசந்து தூங்கி விட்டதால் ரயிலை நிறுத்தி பெண்ணை எழுப்பிய ரயில் ஓட்டுநர் வைரல் வீடியோ Bihar Woman Attempting Suicide on Railway Track Falls Asleep While Waiting for Train - Video



பீகார் மாநிலத்தில் பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் சக்யா ரயில் நிலையம் அருகே முசார்பூர் நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கிடப்பதை பார்த்த ரயிலின் லோகோ பைலட் அவசர பிரேக்குகளை போட்டு ரயிலை நிறுத்திய நிலையில் பயணிகள் உடனடியாக கீழே இறங்கி அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்தப் பெண் தண்டவாளத்தில் அசந்து தூங்கி கொண்டிருருந்தார்  SuicideonRailwayTrackFallsAsleepWhileWaitingforTrain 

அந்த இளம் பெண்ணை எழுப்பிய ரயிலின் ஓட்டுநர் அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அந்த பெண் தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்னை விடுங்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

தன்னுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்கொலை செய்து கொள்வதற்காக அவர் தண்டவாளத்திற்கு வந்துள்ளார். அவர் ரயில் வரும் என்று நினைத்து தண்டவாளத்தில் படுத்திருந்த நிலையில் அப்படியே அசந்து தூங்கிவிட்டார். 

அதோடு தன்னை எதற்காக காப்பாற்றினீர்கள். நான் சாகவேண்டும் என கூறி அந்தப் பெண் கதறி அழுதார். அதோடு தன் குடும்பத்தினரால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1833689854795809118

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback