Breaking News

ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது! வைரல் வீடியோ actor Vinayakan arrested

அட்மின் மீடியா
0

ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது!  வைரல் வீடியோ  actor Vinayakan arrested 

பிரபல மலையாள வில்லன் நடிகரான விநாயகன் ஹைதாபாத் விமானநிலையத்தில் மது அருந்திவிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரை கைது செய்து ஹைதராபாத் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

நடிகர் விநாயகன் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவா செல்லும் போது இணைப்பு விமானம் ஹைதராபாத்தில் இருந்ததால், ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த போது, சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரைல சோதனை செய்தனர். அப்போது, அவர் மது அருந்தி இருந்ததாகவும், மேலும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரை கைது செய்து ஹைதராபாத் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1832622834025218340

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback