Breaking News

சுகாதாரமின்றி சமையல் அப்பு பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் Appu Biryani

அட்மின் மீடியா
0

சுகாதாரமின்றி சமையல் திருவேற்காட்டில் அப்பு பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் Appu Biryani shop in Thiruvekkad for unsanitary cooking sealed by Food Safety Department officials

திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்த பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

 


சென்னை திருவேற்காடு அயனம்பாக்கம் பகுதியில் உள்ள அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்தில் இருந்து பிரியாணி தயார் செய்து சென்னையின் பல்வேறு பகுதியில் அப்பு பிரியாணி கடைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் சந்திரபோஸ் தலைமையில் வந்த உணவு பாதுகாப்புத் துறையினர் கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் கடையின் சமையலறை இருப்பதும் ,தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர் அப்போது கடையின் உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரியாணி பாத்திரங்களை சாலை நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் சமையல் பாத்திரங்களுடன் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback