Breaking News

மீலாதுன் நபி விடுமுறை தேதி மாற்றம் - தமிழக அரசு வெளியிட்ட அரசாணை முழு விவரம்

அட்மின் மீடியா
0
மீலாதுன் நபி விடுமுறை தேதி மாற்றம் - தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளையே மிலாடி நபியாக கொண்டாடுகிறோம். முகம்மது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாடி நபியாக நாம் கொண்டாடுகிறோம்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

ஷரியத் அறிவிப்பு ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. 

ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மீலாதுன் நபி செவ்வாய்க்கிழமை 17-09-2024 தேதி கொண்டாடப்படும். என தெரிவித்துள்ளார்

மேலும் முன்னதாக செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை  என தமிழ் காலண்டரில் உள்ளது மேலும்  அன்று அரசு விடுமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் தலைமை ஹாஜியின் அறிவிப்பை தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு (16.09.24) பதிலாக செவ்வாய்க் கிழமை (17.09.24) அன்று விடுமுறை தேதியை மாற்றி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback