Breaking News

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயிலை சரக்கு ரயில் இன்ஜினை வைத்து இழுத்து செல்லப்பட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

டெல்லியில் இருந்து வாரணாசி வரை சென்ற வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் நின்றதையடுத்து சரக்கு ரயில் ஒன்றின் இன்ஜினை வரவழைத்து, வந்தே பாரத் ரயிலுடன் சேர்த்து, அருகிலிருந்த ரயில் நிலையத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர்

வாரணாசி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால், சரக்கு ரயில் இன்ஜின் உதவியுடன் அருகே உள்ள ரயில் நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.

 


இந்திய தலைநகர் தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் நேற்று காலை 6:00 மணிக்கு வழக்கம் போல் புறப்பட்டது. 

இந்த ரயில் பிற்பகல் 2:05 மணிக்கு வாரணாசிக்கு சென்றடைய வேண்டும் ஆனால் இந்த ரயில் எட்டாவா ரயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதி வழியில் ரயில் நின்றுவிட்டது. 

உடனடியாக ரயிலில் இருந்த லோகோ பைலட் ரயில் பழுது குறித்து தகவல் அளித்தார் , ரயில்வே ஊழியர்கள் ரயிலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தொழில்நுட்ப குழுவினரால் பிரச்னையை சரிசெய்யமுடியவில்லை.

இதையடுத்து சரக்கு ரயிலின் இன்ஜினை வரவழைத்து வந்தே பாரத் ரயிலின் முன்பக்கம் கோர்த்து அருகில் இருந்த பரத்னா ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்றுள்ளார்கள்.அதன்பின் பயணியரை, மாற்று ரயிலில் ரயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும் 

https://x.com/adminmedia1/status/1833397458178597107 

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback