Breaking News

குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல! உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

அட்மின் மீடியா
0

கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல! உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற மதரஸா சரியான இடமல்ல என உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.

யோகி தலைமையிலான உத்தர பிரதேச அரசு, மதரஸா கல்வி வாரியச் சட்டம்-2004 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றமும், மதரஸா கல்வி வாரியச் சட்டம்-2004 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என 2024 மாா்ச் மாதம் உறுதி செய்தது. மேலும், அங்கு மதரஸாக்களில் பயிலும் மாணவா்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், அலாகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் மீண்டும் விசாரணை நடைபெற்றது. 

அப்போது, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சாா்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்படி,மதரஸாக்களில் குழந்தைகளுக்கு முறையான, தரமான கல்வி உறுதி செய்யப்படுவதில்லை.சரியான பள்ளிக் கல்வி முறையில் இல்லாத குழந்தைகள், மதிய உணவு, சீருடை உள்பட தொடக்கக் கல்விக்கான பல்வேறு உரிமைகளை இழக்கின்றனா்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாடத்திட்ட புத்தகங்கள் சிலவற்றை மட்டுமே கற்பிப்பதன் மூலம் மதரஸாக்களில் பெயரளவில்தான் கல்வி போதிக்கப்படுகிறது.

மதரஸா என்பது மாணவா்கள் முறையான கல்வி பெற பொருத்தமான இடமல்ல.கடந்த 2009-ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டப் பிரிவுகள் 19, 21, 22, 23, 24, 25, 29-இன்கீழ் உள்ள உரிமைகளும் அவா்களுக்கு கிடைக்கப் பெறாத இடமே மதரஸாக்கள்.

மதரஸாக்களில் வழங்கப்படும் கல்வியானது, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் விரிவானதாக இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback