Breaking News

தமிழ்நாடு வக்ப் வாரியத்தலைவர் அப்துல் ரகுமான் ராஜினாமா ஏற்பு தமிழக அரசு அறிவிப்பு- வக்பு வாரியத்தின் அடுத்த தலைவர் யார்? முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வக்ப் வாரியத்தலைவர் அப்துல் ரகுமான் ராஜினாமா ஏற்பு தமிழக அரசு அறிவிப்பு- வக்பு வாரியத்தின் அடுத்த தலைவர் யார்?  முழு விவரம்

வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், அடுத்த தலைவர் யார் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான். திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம்

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைப் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் மிக நேர்மையுடனும், எந்த நிர்பந்தங்கள் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குக் கொஞ்சமும் இடமளிக்காமலும், வக்பு சட்டப்படி பணிகளாற்றுவதில் எந்த சமரசம் காட்டாமலும், இறையச்சமிக்கவாழ்வே மிக உயர்ந்தது என்ற உறுதிப்பாட்டுடனும் பணிகள் ஆற்றி வந்திருக்கிறோம்.
 
இந்த உறுதிப்பாட்டில் நிலைத்திருக்க பல சவால்களையும், விமர்சனங்களையும் சந்திக்கவேண்டும் என்பதும் யதார்த்தம். இது எல்லா தரப்பினருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தான்.ஆனாலும் சமூகப் பொறுப்புகளோடு ஆற்றிவரும் கடமைகளில் இன்னும் அதிக உழைப்பும், ஈடுபாடும், சமுதாய நலன் சார்ந்த அர்ப்பணிப்பு பணிகளும் அவசியத்தேவை. அது காலத்தின் கட்டாயம் என்பதை ஆழ்ந்த கவனத்தில்கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையின் ஒப்புதலோடும், வழிகாட்டுதலோடும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு 19/08/2024 மாலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளேன்.
 
மிகச் சிறப்பான ஆட்சிக்குத் தனி அடையாளமாய்த் திகழும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நற்பணிகளுக்கு என்றும் துணைநிற்போம்; மக்களுக்குப் பணிகளாற்றுவதில் சவால்களையும் தாண்டி சாதனைகள் புரிவோம்.இன்ஷா அல்லாஹ்.செவ்வனே பணிகளாற்ற ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கிய தமிழ்நாடு அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், மாண்புமிகு துறை அமைச்சர் மற்றும் வாரிய உறுப்பினர்களுக்கும், வாரிய அலுவலர்களுக்கும், பல்வேறு வக்பு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். என அதில் குறிப்பிட்டு இருந்தார்

ராஜினாமா ஏற்பு:-

இந்நிலையில், அப்துல் ரகுமானின் வக்பு வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் பதவி ராஜினாமா ஏற்கப்பட்டதாக தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சி.விஜயராஜ்குமார் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வக்பு வாரியத்தின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல்வர் அமெரிக்க பயணம் முடிந்து இன்று சென்னை திரும்பும் நிலையில், விரைவில் வக்பு வாரிய தலைவர் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback