Breaking News

திருவண்ணாமலை கிரிவலம் சிறப்பு ரயில், பேருந்து அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருவண்ணாமலை கிரிவலம் சிறப்பு ரயில், பேருந்து அறிவிப்பு முழு விவரம்

திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்திற்காக விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

விழுப்புரத்திலிருந்து இன்று (செப்.17) காலை 9.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண்.06130) திருவண்ணாமலையை இன்று முற்பகல் வந்தடையவுள்ளது. 

மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து இன்று பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் விழுப்புரத்திற்கு (வ.எண்.06129), பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 9.15 மணிக்குப் புறப்படும் எனவும், அந்த ரயில் (வ.எண்.06131) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் நாளை (செப்.18) அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் ரயில் (வ.எண் 06132) அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு பேருந்து :-

இன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 300 பேருந்துகளும். கோயம்பேட்டிலிருந்து 15 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 17/09/2024 இன்று 175 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு (17/09/2024) இன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, சேலம். கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர். திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. . 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback