Breaking News

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அட்மின் மீடியா
0

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு Chief Minister M.K.Stal's order to increase the amount of assistance for differently-abled students studying in schools and colleges

           

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி அரசாணை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு கல்வி உதவித்தொகைக்காக 14 கோடியே 90 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது 

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கடிதத்தில், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி, ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) படிக்கும் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் நீட்டித்து வழங்குவதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி படிப்பு படித்து அவர்களது கல்வித் தகுதியினை உயர்த்தி கொள்வதன் மூலம் சமுதாயத்தில் உயரிய நிலையினை அடைய ஏதுவாக அமையும் என்றும், மேலும், முழுநேர ஆராய்ச்சி படிப்பில் (Ph.D.,) சேரும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், "முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chief Minister's Research Fellowship) எனும் புதிய திட்டத்தின்கீழ், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 1,00,000/- வீதம் 50 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 50.00 இலட்சம் செலவில் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இத்திட்டத்தினை செயல்படுத்திடுத்திட உரிய அரசாணை வழங்குமாறு கோரியுள்ளார்.

              

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் செயற்குறிப்பினை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்று ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) படிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை நீட்டித்து "முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chief Minister's Research Fellowship) என்று, கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 50 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1,00,000 வீதம், ரூ. 50.00 இலட்சம் (ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள் 

முழுநேர / பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) பயிலும், மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. 

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர / பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும். 

ரூ.1.00/-இலட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்பித்தவுடன் இத்தொகை முழுவதுமாக அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மூலம் நேரடியாக மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் வங்கிக் கணக்கிற்கு ECS மூலமாக செலுத்தப்படும். 

            

ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை / தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், முழுநேர / பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிடச் சான்று (Nativity Certificate) முதலியவற்றை சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cms.tn.gov.in/sites/default/files/go/wda_t_18_Ms_2024.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback