Breaking News

என்னுடைய ஏரியாவுக்குள் வந்து, என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்தி பேசியிருக்கும் அந் நபரை சும்மா விடமாட்டோம் அன்பில் மகேஷ் ஆவேசம்

அட்மின் மீடியா
0
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். 


அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் மறுபிறவி தொடர்பான கருத்துக்களையும் மந்திரம் சொன்னால் போதும் அனைத்தும் நடக்கும் என  அவர் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆசிரியர் ஒருவர் குறுக்கிட்டு இது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் பேச்சா அல்லது ஆன்மீக சொற்பொழிவா? மறு பிறவி பற்றி பேசுறீங்க, கர்மா பற்றி பேசுறீங்க” என்று அந்த ஆசிரியர் கேட்டதும் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்று உரத்த குரலில் அவர் கேட்கிறார். 
 
அரசுப் பள்ளிகளில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை பேச்சு வீடியோ பார்க்க  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/09/blog-post_55.html 

இது தப்பு’ என்று அந்த ஆசிரியர் சொல்கிறார். மறுபிறவி பற்றி ஏன் சொல்கிறீர்கள் என்று அந்த ஆசிரியர் கேட்டதற்கு விதண்டாவாதமாக அந்த சொற்பொழிவாளர் ஆசிரியரிடம் கேட்கிறார்.இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரல் ஆனதை தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தினார். 
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 
பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் உள்ளது” என்றார்.
 
மேலும் என்னுடைய ஏரியாவுக்குள் வந்து, என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்தி பேசியிருக்கும் அந்நபரை சும்மா விடமாட்டோம்.என கூறை அவர் மேலும் தன்னம்பிக்கை பேச்சாளரை மாணவர்களிடம் பேச வைக்கும் ஆசிரியர்களின் முயற்சியில் தவறு இல்லை. ஆனால், அவர்களின் பின்னணியை சோதிக்காமல், என்ன மாதிரி பேசப்போகிறார் என்பதை தெரிந்தே அழைத்து வந்திருக்க வேண்டும். 
 
சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வந்ததில் பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு உள்ளது. இருப்பினும் அந்த தைரியத்தை அவர்களுக்கு வழங்கியது யார், அனுமதி கொடுத்தது யார் என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று தெரிவித்தார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback