அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது முதல்வர் ஸ்டாலின்
உதயநிதி துனை முதலமைச்சர் ஆவாரா என்ற கேள்விக்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது முதல்வர் ஸ்டாலின் பதில்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது முதல்வர் ஸ்டாலின் பதில்
சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகளின் நிலை, முடிவுற்ற பணிகளை தொடக்கி வைப்பது, புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிதல் என பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது, 2 நாட்களின் நானும் ஆலோசனை நடத்த உள்ளேன்” என்றார் எப்போதும் கொளத்தூர் தொகுதிக்கே வருகிறீர்களே? என்ற கேள்விக்கு, “இது எப்போதும் என் சொந்த தொகுதி.. நம்ம வீட்டு பிள்ளை போல பார்ப்பார்கள்.. அதனால் எப்போது வருவேன்” என்று கூறினார்.
முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்பதாக எழுப்பிய கேள்விக்கு, “அவர்களுடைய வெள்ளை அறிக்கை எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும்.. இது ஒன்றும் ஏமாற்று வேலை அல்ல.. எற்கனவே அமைச்சர் ராஜா இன்று பதில் சொல்லிருக்கிறார். முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட தெளிவான விளக்கமே, வெள்ளை அறிக்கைதான்.” என்றார்.அமைச்சரவை மாற்றம் இருக்குமா? மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு “ஏமாற்றம் இருக்காது.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்” என்று தெரிவித்தார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்